தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர்-களை மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்டமாக தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் பெண்களுக்கு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அம்மா மானிய விலை ஸ்கூட்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.


இந்நிலையில், தமிழக அரசால்,  50% மானிய விலையில் வழங்கப்படும், 'அம்மா ஸ்கூட்டர்'களை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.


இதன்படி இந்த ஸ்கூட்டரை பெறுபவர்களுக்கு அவர்களது ஆர்சி புத்தகத்தில் சீல் வைக்கப்படும் என்றும் இந்த ஸ்கூட்டர்களை மூன்று ஆண்டுகளுக்கு பெயர் மாற்ற முடியாது என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து மானிய விலையில் ஸ்கூட்டரை பெற்று அதிக விலையில் விற்பனை செய்வதை தடுக்கவே இந்த அதிரடி ஆணண என்று கூறப்படுகிறது.