லோக் ஆயுக்தா சட்டத்தை 3 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவு!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.


இதனையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடத்தது. பின்னர் அதே மாதம் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், இதுவரை தமிழகம், ஜம்முகாஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, தெலங்கானா, திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம் ஆகிய 11 மாநிலங்களில் இந்த சட்டம் இயற்றப்படவில்லை. 


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிரப்பித்துள்ளது. விசாரணையின் போது லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டமல் இருப்பது அதிருப்தி அளிக்கின்றது என நீதிபதிகள்ள தெரிவித்துள்ளனர்.


மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா, கால தாமதம் செய்வதையே தமிழக அரசு விரும்புகிறதா என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். 


இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்