’கல்விட்டு எறியமாட்டோம் ஆனால்...’ஆளுநர் ஆர்என் ரவிக்கு துரைமுருகன் கடும் எச்சரிக்கை
Tamil Nadu Governor live update: அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை... இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனி தீர்மானத்தின் மீது துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், அரசியல் அமைப்பு விதிகளை சுட்டிக்காட்டி, இதற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை.. இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை எனவும் சாடினார்.
ஆளுநர் பதவி தேவையில்லை
அவர் பேசும்போது, ஆட்சிக்கு வருவோமா என தெரியாத காலத்திலேயே, ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய கட்சி திமுக. ஆனால் அதனை அரசியலமைப்பில் கொண்டு வந்துவிட்டார்கள். இருப்பினும் அந்த பதவி தேவையில்லை என ஆயிரம் முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட இதனை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு மாநில அரசை ஆட்டிப்படைப்பதற்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைப்பதற்கு தங்களுக்கு ஒரு ஏஜெண்ட் வேண்டும் என்று இந்த கவர்னர் பதவியை உருவாக்கிவிட்டார்கள்.
மேலும் படிக்க | சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்!
இந்த பதவி வந்த பிறகு, பல மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு காரணமாக ஆளுநர்கள் தான் இருந்திருக்கிறார்கள். முதன்முதலில் கேரளாவில் ஆட்சியை கலைத்தார்கள். இப்போது மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஏற்படுத்தியவருக்கு பதவி கொடுதிருக்கிறார்கள்.
குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை
அதனை பார்த்து தமிழக கவர்னருக்கும் ஒரு நப்பாசை வந்துவிட்டது. அதனால் எந்த பைல்களும் கையெழுத்தாவதில்லை. முதலமைச்சர் போய் இது குறித்து சந்தித்தபிறகும் பைல்கள் எதுவும் வரவில்லை. அதுமட்டுமில்லாமல் வாயைவைத்துக் கொண்டும் சும்மா இருப்பதில்லை. உள்நோக்கத்தோடு தமிழக ஆளுநர் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். சட்டப்பேரவை எந்த தீர்மானத்தை அனுப்புகிறதோ அதனை நிராகரிக்க ஆளுநருக்கு உரிமையில்லை.
2வது முறையாக அனுப்பும்போது கையெழுத்து மட்டுமே போட்டு அனுப்ப வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாக அர்த்தம். யார் ஒருவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுகிறோரா அவர் ஆளுநராக மட்டும் இல்லை.. இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை.
பாஜகவுல போய் சேர்ந்துக்கோ
உங்களுக்கு ஒரு கட்சி கொள்கை இருந்தால் ராஜிநாமா பன்னிட்டு போங்க. குடியரசு தின விழாவுக்கு முதலமைச்சர் போகமாட்டேன் என இருந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவியே போன் செய்து அழைத்தார். போக வணேடாம் என்ற முடிவில் இருந்த நேரத்தில் ஆளுநர் போன் செய்து அழைத்ததால் சரி போகலாம் என முடிவெடுத்து அங்கே போனோம். அப்போது இந்திய வரலாறு குறித்த படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள் என்று ஒளிபரப்பப்பட்ட படத்தில் எல்லாம் வருகிறார்கள். ஆனால் காந்தியும், நேருவும் இல்லை. சாவர்க்கர் மட்டும் மீண்டும் மீண்டும் வருகிறார். சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகள் என்று ஒளிபரப்பப்பட்ட படத்தில் மகாத்மா காந்தி இல்லாம.. சுதந்திரமா?. யார் அப்பன் வீட்டு பணத்துல இந்த படத்தை காட்டுறீங்க?. பாஜகவா இருந்தா போய் அந்த கட்சியில சேர்ந்துக்கோ.
கல்விட்டு எறியமாட்டோம் ஆளுநரே..
சட்டப்பேரவை அனுப்பும் தீர்மானத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்தினால், அடுத்த என்ன நடக்கும் என்பதை இந்த பேரவை கூடி தீர்மானிக்கும். அதிமுகவினர் சென்னாரெட்டி கார் மீது கல்விட்டு எறிந்ததுபோல் நாங்கள் எறியமாட்டோம். நாங்கள் அண்ணாவால், கலைஞரால் கன்னியமாக வளர்க்கப்பட்டவர்கள். இதற்கு மேலும் இப்படி நடந்து கொள்ள மாட்டார் என நினைக்கிறோம். என்னை பொறுத்தவரையில் ஆளுநர் பதவி தேவையில்லை. இந்த பதவியை கட்டாயம் நீக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
மேலும் படிக்க | கர்நாடகா தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ