காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நேற்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உடல்நல குறைவால் அவர் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று காலை திடீரென ஜெயேந்திரருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சங்கரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


இந்நிலையில் அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


ஜயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முக்கியத் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சங்கர மடம் நோக்கிச் செல்லும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திரர் உடலுக்கு இன்று அபிசேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெயேந்திரருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த ஜெயேந்திரர் உடல் பிருந்தாவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.