அக்டோபர் மாதத்திற்குள் 75% பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: தமிழக அரசு
தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சென்னை: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள டெங்கு சிறப்பு வார்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டார்கள். மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
வடகிழக்குப் பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்குவை ஒழிப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
செவிலியர்கள் மன உளைச்சலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. தடுப்பூசி பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறினார்.
ALSO READ | 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
தமிழ்நாட்டில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 22 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இம்மாத இறுதிக்குள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் மிகச் சிறப்பான பணியாற்றி வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பால் தமிழகத்தில் தற்போது 1,500-க்கும் கீழ் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ALSO READ | அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR