சென்னை: தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்யலாம் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. 


வடகிழக்கு மற்றும் அதனுடன் இணைந்த கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலையை இந்திய வானிலை மையம் கண்காணித்து வருகிறது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைகளில்  சூறாவளி ஏற்படலாம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  



இதனால், கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரபலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.  


அதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 25), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்


நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்த மாதம் 28-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை முன்னறிப்பு கூறுகிறது.


தமிழகத்தில், ‘திருப்பூர் மாவட்ட அலுவலகம் 18 செ.மீ., ஏத்தாப்பூர் 11 செ.மீ., சங்கரிதுர்க், நீடாமங்கலம் தலா 9 செ.மீ., செட்டிகுளம், நாவலூர் கொட்டப்பட்டு தலா 8 செ.மீ., அரவக்குறிச்சி 7 செ.மீ., கள்ளிக்குடி, ஆத்தூர் தலா 6 செ.மீ., திருப்பத்தூர், சிவகங்கை, காரியாபட்டி, பாரூர், ஜமுனாமரத்தூர் தலா 5 செ.மீ., கூடலூர் பஜார், வலங்கைமான், பொன்னமராவதி தலா 4 செ.மீ.’ உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


ALSO READ | தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR