சேலம் மாநகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் நாளை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை கழகம் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டது. அதில் சேலம் மாநகராட்சியின் மேயராக பதவி ஏற்க போவது யார் என்ற உச்சகட்ட பதட்டம் கட்சி நிர்வாகிகள் இடையே அதிகரித்திருந்த நிலையில், மேயர் பதவிக்கு கட்சியின் மூத்த நிர்வாகி ராமச்சந்திரன் என்பவரை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேளையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்து வந்த மாமன்ற உறுப்பினர் உமாராணி ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் செல்வி குடும்பத்தினர் மூலம் மேயர் பதவி பெற்று தர முயற்சி செய்ததாக கூறப்பட்டது.


மேலும் மேயர் பதவிக்கான போட்டியில் மேலும் சிலரது பெயர்களும் இடம்பெற்றது. இவர்களில் யாருக்கு மேயர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகியான ஆறாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் என்பவரை மேயர் பதவிக்கு திமுக தலைமை கழகம் அறிவித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க: 340 வருட வரலாற்றில் சென்னை மாநகராட்சியின் மேயராகிறார் இளம் பெண் பிரியா ராஜன்


இதனால் ஸ்டாலின் கிச்சன் கேபினட் பரிந்துரை கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் மேயர் பதவிக்கான போட்டியில் முதல் இடத்தில் இருந்த ராமச்சந்திரனுக்கு திமுக தலைமை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதேபோல் துணைமேயர் கனவில் இருந்த திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. சேலம் மாநகராட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவித்தது திமுக மாமன்ற உறுப்பினர்களை திமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


48 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுகவினருக்கு துணைமேயர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 இடங்களை பிடித்த காங்கிரஸுக்கு துணை மேயர் பதவி கொடுத்தது எந்த வகையில் நியாயம் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.


இருப்பினும் கட்சி மேலிடத்தின் அறிவிப்பால் எதுவும் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர் மொத்தத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒட்டுமொத்த வெற்றி பெற்றாலும் அதனை பெரிதாக அனுபவிக்க முடிவில்லை என்பதே திமுகவின் கருத்தாக உள்ளது.


மேலும் படிக்க: பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR