நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் தடையையும் மீறி, ஹெச்.ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர். 


இதை தொடர்ந்து, காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து ஹெச்.ராஜா மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் செயல்படுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.