ரவுடி அப்பளம் ராஜா-வை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்! பின்னணி என்ன?
Rowdy Appalam Raja News: ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி உள்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைக்குறித்து பார்ப்போம்.
Crime News In Tamil: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஷ்வா. இவர் மீது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அண்மையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதான விஷ்வா விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி அன்று பிணையில் இருந்து வெளிவந்த விஷ்வா மதுரையைச் சேர்ந்த ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் தீவிரமாக விஷ்வாவை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பளம் ராஜா என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பளம் ராஜா, தியாகராஜன், சுரேஷ்குமார், சிவகுமார், மைனர் செல்வம் உள்ளிட்ட 5 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பின்னர் 5 பேரையும் ஒரகடம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஸ்கிராப் எனப்படும் இரும்புக் கழிவுகளை ஒப்பந்தம் எடுக்க வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரபல ரவுடி விஷ்வாவும், அப்பளம் ராஜாவும் கூட்டாக சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏற்கனவே கொலை சம்பவங்களை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
அதேபோன்று தற்போது அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. ஸ்கிராப் எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஐந்து பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பிணையில் வெளி வந்துள்ள ரவுடி விஷ்வாவை மீண்டும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க - மதுரையில் பரபரப்பு: ஆளுநரை மாற்றக்கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ