தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் (Salem District) குப்பை அள்ளும் தொழிலைச் செய்யும் ஒருவர், தான் சமீபத்தில் வாங்கிய ஒரு நிலத்தில், தனது முழு உருவச் சிலையை உருவாக்கியுள்ளார். இதற்கு அவர் இதுவரையிலான தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்பொழுதும் தனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்பிய அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.நல்லதம்பி, தெருவில் வீசப்படும் பாட்டில்களை எடுத்து அவற்றை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நிலத்தை வாங்கி, அதில் தனது சொந்த சிலையை (Statue) உருவாக்க, 10 லட்சம் ரூபாயை செலவிட்டார்.


“நான் சிறு வயதில் இருந்தபோது, வித்தியாசமாய் பெயர் எடுக்க வேண்டும், எனக்கென ஒரு சிலை இருக்க வேண்டும் என விரும்பினேன். நான் இப்போது எனது கனவை நிறைவேற்றியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.


இதற்கு முன்னர் ஒரு மேஸ்திரியாக இருந்த நல்லதம்பி, அதை தொடர முடியாமல் அந்த வேலையை கைவிட்டார். இறுதியில் அவருக்கு தனது குடும்பத்தினருடனும் ஒத்துப்போகாமல் ஆனது. இதைத் தொடர்ந்து அவர் தன் ஆனைமேடு கிராமத்தை விட்டு வெளியேறினார்.


பின்னர் அவர் குப்பை அள்ளும் தொழிலில் இறங்கினார். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிற பொருட்களை சேகரித்து, அவர் 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.


தனது கொத்தனார் நாட்களில் இருந்து அவர் சேமித்த அனைத்து பணத்தையும் (Life Savings) கொண்டு, நல்லதம்பி இரண்டு நிலங்களை வாங்கினார். ஒவ்வொன்றும் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழப்பாடி-பேலூர் கிராம சாலையில் அவரது நிலம் உள்ளது. நிலத்தை வாங்கிய பிறகு, அவர் தனது உருவச் சிலையை உருவாக்க உள்ளூர் சிற்பிக்கு 1 லட்சம் ரூபாய் அளித்தார்.


20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்ட நல்லதம்பி, தனது செல்வத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அவர் தனது வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அந்த தொகையை எல்லாம் செலவிட்டார்.


இந்த சிலை, ஒரு பீடத்தில் அமைக்கப்படு ஒரு கூரையுடன் உள்ளது. இது ஒரு இடைக்கால தமிழ் தலைவரின் உருவத்தை ஒத்துள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே சிலையை பலர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, நல்லதம்பி தனது சொந்த சிலையை பிரமாண்டமான முறையில் திறக்க திட்டமிட்டுள்ளார்.


சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் மதுரைச் சேர்ந்த 74 வயதான ஒரு வணிகர், தனது மறைந்த மனைவியின் உருவச் சிலையை தனது வீட்டில் நிறுவினார்.


ALSO READ: மரணம் பிரித்த மனைவியை சிலையாய் மீட்ட கணவர்: காதல் பிரியாதது!!


இதற்கு முன்னதாக, கர்நாடகாவைச் (Karnataka) சேர்ந்த ஒருவர் புதிதாக கட்டப்பட்ட தனது வீட்டில் புதுமனை புகுவிழாவை நடத்தினார். இந்த நிகழ்வில், தன்னுடன் கலந்துகொள்ள அவர் தனது மனைவியின் உருவச் சிலையை செய்தார். 


ALSO READ: காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!!