தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கோடை வெப்பம் கொளுத்தும் நிலையிலும் மாணவர்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.


எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வருகிறது. இன்னமும் பல மாவட்டங்களில் I00 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிப் போகலாம் என்றும் செய்திகள் பரவின. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.


அதன்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை திறக்கப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.