ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பயங்கரவாத தாக்குதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராணுவ வீரர் லெட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அவரது உடல் நாளை காலை ராணுவ விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதை செலுத்திய பின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ராணுவ வீரரின் சொந்த ஊரான புதுப்பட்டியில் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழக பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி: காஞ்சிபுரத்தில் மெகா மனித சங்கிலி 


நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் பலியாகியுள்ளார். அவருக்கு வீர வணக்கம். குடும்பத்தாருக்கும் – நண்பர்களுக்கும் எனது  அனுதாபங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.


அதேபோல் விகே சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜம்மு காஷ்மீரில் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருப்பதாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது.மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்   ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.வீர மரணம் அடைந்த திரு.லட்சுமணன் உள்ளிட்ட மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீர மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கோவையில் எரிவாயு குழாய் வெடிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ