சென்னை: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் (Rameshwaram), பாம்பன் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  வெள்ளிக்கிழமை காலை இலங்கை கடற்படை தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படகுகள் பம்பன் பகுதியிலிருந்து வங்காள விரிகுடாவிற்கு சுமார் 15-20 கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக மீனவர் சமூகத் தலைவர் ஒருவர் கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"காலை 11 மணியளவில் இலங்கை கடற்படை படகு ஒன்று இந்திய மீன்பிடி படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அவர்கள் கனரக துப்பாக்கியால் சுட்டனர், கைத்துப்பாக்கியால் சுடவில்லை" என்று பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் (Traditional fishermen federation) ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி ஜீ ஊடகத்திடம் தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டில் யாரும் பலியாகவில்லை என்றாலும், வலுவான ஃபைபர் படகை துளைத்த புல்லட்டை அவர் காண்பித்தார்.


படகில் இருந்த புல்லட் துளையை வீடியோவாக எடுத்து அதை மீனவர்கள் பகிர்ந்துள்ளனர். அதோடு, படகில் இருந்து எடுத்த புல்லட்டின் புகைப்படத்தையும் காட்டுகின்றனர். இந்த தாக்குதல்கள் அச்சங்களை அதிகரிப்பதாக மீனவர் சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். மரப் படகுகளில் செல்லும்போது துப்பாக்கிச் சூடு நடத்தினால், டுமையான சேதம் மற்றும் உயிர் இழப்பு ஏற்படக்கூடும் என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, மெரினா காவல்துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் பேசியுள்ளனர்.


Also Read | ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்


மத்தியில் ஆளும் பாஜகவின் ஒரு பகுதியாக இருக்கும் மாநிலங்களவை எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இந்த விவகாரம் குறித்து தமிழில் ட்வீட் செய்திருக்கிறார். இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், இதுபோன்ற நிகழ்வுகளை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் காயமின்றி தப்பித்தது அவர்களது அதிர்ஷ்டம். ஆனால் அவர்களது படகு சேதமடைந்துள்ளது.



படகில் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீடு தேவை என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்திய-இலங்கை கடல் ஒப்பந்தத்தின் கீழ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மத்திய அரசை கேட்டுக்கொண்டார். பாரம்பரியமாக, இந்த தீவும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களால் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.  பாக் ஜலசந்தியில் (Palk Strait) கடல் எல்லைகளைத் தீர்க்கும் நோக்கில் அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.


Also Read | இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR