எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க கோரியும், 8 வழிசாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



இந்த மனுவை இன்று விசாரனைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மாவட்ட விவசாய விளைநிலங்களை கிணறுகள் கண்மாய்கள் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை விளைநிலங்களை அழித்து ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 273.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்க அரசு தயாராகி வருகிறது.


இத்திட்டம் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான பாதை அமைக்கும் திட்டம் என பலரும் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர். 


விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலம் வீடு கிணறுகள் சொந்த நாட்டிலேயே அரசின் நிவாரண நிதிக்காக காத்திருக்கும் வாழ்க்கை முறையை 8 வழிச்சாலை அமைக்க அரசு முன் வைக்கும் திட்டம், எனவே இத்திட்டத்தினை கைவிட வேண்டும் என தமிழக கட்சித் தலைவர்கள் பலரும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.