தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அதை அரிசி குடும்ப அட்டையாக மாற்றி கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விருப்பமுள்ளவர்கள், தகுதியின் அடிப்படையில் சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்றி கொள்ளலாம். சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது குடும்ப அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிகக் வேண்டும்.


டிசம்பர் 20 ஆம் தேதி வரை குடும்ப அட்டைகளை (Ration Card) மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


குடும்ப அட்டைகளை மாற்றுவது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இந்த அறிக்கையில், ‘பொது விநியோக திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்போர் பெரும்பாலானோர் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றி தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K Palaniswami) சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.


ALSO READ: வளைந்து கொடுக்கவில்லை என்றால் உடைந்து போவாரா: சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல் ஹாசன்


சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு (Tamil Nadu Government) தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள், உடனடிடாக பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்குக!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR