இந்தியாவில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள விவரம்:-


கடந்த 2016 ஆண்டு தமிழகத்தில் மட்டும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2015-ம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி உள்ளது.


தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மூன்றாவது இடத்தை மேற்கு வங்கம் பிடித்துள்ளது. அங்கு மொத்தம் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன.


அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவாகி  உள்ளது.