Weather Forecast: கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, கடலூர், கரூர், சேலம், வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும், கத்திரி வெயில் மே மாதம் நான்காம் தேதி தொடங்குகிறது.
Also Read | அல்டிமெட் ஸ்டார் அஜித்துக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்துகள்
தலைநகர் சென்னையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:-
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மே மாதம் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read | வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு: வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை
பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலையானது இன்றும், நாளையும் இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையத்தின் அறிக்கை கூறுகிறது.
Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR