தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் 11-ம் தேதி தமிழகம் வருகை
தமிழக அரசியலில் பரபரபப்பு நிலவி வரும் நிலையில், அடுத்த வாரம் திங்கள்கிழமை(11-ம் தேதி) தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார்.
எடப்பாடி தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி தினகரன் ஆதரவு எம்எல்ஏ மற்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி வரும் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழகம் வருகை மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.