உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி, வேட்டி,சேலை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பழங்குடியின மற்றும் இருளர் மக்களுக்கு வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!


அதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இது போன்று, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில்  வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அந்த கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சுகன், கே.சதீஷ், பி. வினோத், உதயன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


கில்லி ரீ- ரீலிஸ் கொண்டாட்டம்!


நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று கில்லி திரைப்படம் வெளியானது. கில்லி படம் விஜய் ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படமானது 20 ஆண்டுகளுக்கு பின் இதே தேதியில் இன்று மீண்டும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் ரீ ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விஜயின் கில்லி படம் இன்று காலை திரையிடப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்களும் இருக்கைகள் நிரம்பியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ