அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்ப்பிணிகளுக்கான அம்மா தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் தனியார் நிறுவனத்தின் பானத்திற்கு பதிலாக ஆவின் நிறுவனத்தின் பானத்தை பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் ஆவினுக்கு பதிலாக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்ப்பிணிகளுக்காக  2 ஆண்டுகளுக்கு 23,88,000 ஆயிரம் கிட்களை தமிழக அரசு வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள் வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட்  நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் குளறுபடிகளை செய்யதும் இந்த நிறுவனம் தான். ஆவினுக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்த நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி பணம் கைமாறியுள்ளது. அது யாருக்கெல்லாம் சென்றிருக்கும் என்பது இனிதான் தெரியவரும். கர்ப்பிணிகளுக்கான கிட்டில் 2 பொருட்களை தனியார் நிறுவனத்தில் வாங்கியதில் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.77 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது. 


அம்மா தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் துறைதான் என்றாலும் அவர் மீது நாங்கள் புகார் வைக்கவில்லை. ஏனெனில் இரு தனி நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக அமைச்சர் கமிஷன் பெற்றாரா? என தெளிவுபடுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தை முதல்வர் இன்னும் ஏன் தடை செய்யவில்லை. 20-ம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல், சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம் என அண்ணாமலை கூறினார்.


மேலும் படிக்க | திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது... ஆனால் முதல்வருக்கு தொடர்பில்லை - அண்ணாமலை!


அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். 


ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார். முறைகேடு நடந்திருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகளின் கூறி வரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும்.


ஒப்பந்தப்பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது, நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்


மேலும் படிக்க | அண்ணாமலையிடம் பம்முகிறார்களா திமுக அமைச்சர்கள் ?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR