தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அதிரடி திட்டங்களை வழங்கியுள்ள தமிழக அரசு!
Tamilnadu Agriculture Budget 2024: நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் பாரம்பரிய நெல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் விதை விநியோகத்தை பட்ஜெட்டில் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான விவசாயத்திற்கான தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடும் பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் விதை விநியோகத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டில் அறிவித்தார். தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வரும் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மண் வளத்தை மேம்படுத்துவது, ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆகியவை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அமைச்சர் அறிவித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பாக உள்ளது - எம்எல்ஏ வேல்முருகன்
தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2024 சிறம்பம்சங்கள்:
- உழவர்சந்தைகளில் விற்பனை செய்வதைப் போன்று தரமான வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
- தினை, விளைச்சலை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ரூ. 65.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல் பயிர்களில் ரசாயன உரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காலநிலை மாற்றத்தை சமாளிக்க கிராமங்களை வளர்ப்பதற்கு புதிய நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் ரூ. 206 கோடி மதிப்பில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விவசாயத்தை முதன்மைத் தொழிலாக மேம்படுத்தி, தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றி, நிகர சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு மாதிரியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,482 கிராம பஞ்சாயத்துகளில் ரூ. 200 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
- எதிர்பாராத இயற்கை பேரிடர்களால் ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து விவசாயிகளை மீட்பதற்காக, பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9,988 விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்புக்காக ரூ. 14.55 கோடிக்கான காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
- காலநிலை மாற்றம், அடுத்த 20 ஆண்டுகளில் பல்லுயிர்ப் பரவல், பயிர் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், வேளாண் உற்பத்தியைக் குறையாமல் பாதுகாத்திடவும், உரிய தொழில்நுட்பங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கி, இத்தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பரவலாக்கம் செய்யப்படும். இதற்கென, ஒரு கோடியே 48 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- காய்கறிகள், பழங்களின் தினசரி நுகர்வு மக்களிடையே மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழச்செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்கப்படும். இதனால் பூச்சிக் கொல்லிகள் இல்லாத, நச்சுத்தன்மையற்ற பழங்கள், காய்கறிகள் கிடைக்கும். இத்திட்டத்திற்கென 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப்போர்வை இயக்கத்தில் 24 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவினத்தில், ஒரு கோடியே 96 இலட்சம் மரக்கன்றுகள் 72,597 விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டன. விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் வேளாண் காடுகள், நிரந்தரப் பசுமைப் போர்வையினை உருவாக்குவதோடு, இலாபம் தரும் பண்ணைத் தொழிலாகவும் விளங்குகின்றன. 2024-2025-ف ஆண்டில் தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்திடவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறிய, பெரிய, உயர் தொழில்நுட்ப (ஹை-டெக்) நாற்றங்கால்கள் அமைப்பதற்கு வேளாண்காடுகள் திட்டத்தில், 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இயற்கையிலேயே பண்புகளுடைய உயிரி பூச்சிக்கொல்லி ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளின் 50 இலட்சம் செடிகளைத் தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்து பரவலாக்கம் செய்திட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவுப் பழக்க வழக்கத்தினாலேயே நல்வாழ்வு வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் இரகங்கள், 2024-2025-ஆம் ஆண்டில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யும் வகையில் விதை விநியோகம் செய்யப்படும்.
மேலும் படிக்க | காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேரமாட்டார் - செல்வப்பெருந்தகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ