தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல முனைப் போட்டி இருந்தது. ஆனாலும் அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே முன்னிலை பெற்றன.


இத்தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.  திமுகவும் அதன் கூட்டனி கட்சிகள் 98 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக  அமர்ந்துள்ளது.


டெபாசிட்டை இழக்காத கட்சி:-


திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது, மற்ற 85 தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பிடித்தது. எந்த தொகுதிகளிலும் தனது டெபாசிட்டை இழக்கவில்லை.


அதிமுக 232 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.


தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை தவிர 103 தொகுதிகள் டெபாசிட் போனது.


மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகள் டெபாசிட் இழந்தது.


தமாகா 29 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகள் டெபாசிட் இழந்தது. 


சிபிஐ 25 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகள் டெபாசிட் இழந்தது. 


விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகள் டெபாசிட் இழந்தது.


சிபிஎம் 25 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.


பாமக 230 தொகுதிகளில் போட்டியிட்டு 212 தொகுதிகள் டெபாசிட் இழந்தது.


எனவே நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட டெபாசிட் இழக்காத கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது.