சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், 
பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல பல பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்களை கோயிலுக்கு அனுமதிக்கக் கூடாது என இன்னொரு புறம் எதிர்ப்பும் தீவிரமாகியிருக்கிறது. 


இந்நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் "ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும்......பண்பாடு..பாதுகாக்கப்பட வேண்டும்.... அங்கு...பெண்பாடு முக்கியமில்லை...பழக்கப்பட்டுவரும்...பண்பாடுதான் முக்கியம்...இது மூடநம்பிக்கையல்ல...முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய.. நம்பிக்கையல்ல...தீர்க்கமான..தீவிரமான நம்பிக்கை" என பதிவிட்டுள்ளார். 



சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள்- ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிரபித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!