தமிழக பட்ஜெட் 2017 - 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருவாய் வரவுகள் ரூ.1,59,363 கோடி எனவும், வருவாய் செலவுகள் ரூ.1,75,293 கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடி  உள்ளது என கூறி அமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையை முடித்தார்.


இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.


பட்ஜெட் அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள்:-


* பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.


* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு


* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு


* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு


* நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் ஆண்டுக்கு 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக வழங்கப்படும் 


* மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ1,001 கோடி ஒதுக்கீடு


* ரூ420 கோடியில் 20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்


* பட்ஜெட்டை திடீரென வேகமாக வாசிக்க தொடங்கிய ஜெயக்குமார்


* 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு


* இலவச வேட்டி சேலைக்கு ரூ490 கோடி ஒதுக்கீடு


* தொழில்துறைக்கு மொத்தம் ரூ2,088 கோடி ஒதுக்கீடு 


* ஐடி வளர்ச்சிக்கு ரூ116 கோடி ஒதுக்கீடு


*100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு 


* நெடுஞ்சாலை துறைக்கு ரூ10,067 கோடி ஒதுக்கீடு


* சென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ744 கோடி ஒதுக்கீடு


* ரூ3,100 கோடியில் புதிய பாலங்கள், சாலை அகலப்படுத்தும் பணி


* நீர்வள ஆதார துறைக்கு ரூ4,500 கோடி


* அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு


* ரேஷன் கடையில் மானிய விலையில் பருப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் 


* அம்மா உணவகம், மருந்தகங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்


* தாமிரபரணி - நம்பியாறு நதிகள் இணைப்புக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு 


* அணைகள் மேம்பாடு, புனரமைக்கு ரூ350 கோடி ஒதுக்கீடு


* ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு


* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு


* தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு


* கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.615 கோடி செலவிடப்படும்


* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு


* சமச்சீர் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.282.22 கோடி ஒதுக்கீடு


* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி ஒதுக்கீடு


* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு


* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு


 


11.35 AM: வேளாண் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.


* குடிமராமத்து பணிக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு 


* சுற்று சூழல், வனத்துறைக்கு ரூ567 கோடி ஒதுக்கீடு 


* பசுமை திட்டத்துக்கு ரூ88 கோடி ஒதுக்கீடு 


* நாட்டு மரங்கள் நடுவது ஊக்கப்படுத்தப்படும் 


* ரேஷன் கடையில் மானிய விலையில் பருப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் 


* அம்மா உணவகம், மருந்தகங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.


* வேளாண் துறைக்கு ரூ.1680.73 கோடி நிதி ஒதுக்கீடு


* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி நிதி ஒதுக்கீடு


* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி நிதி ஒதுக்கீடு


* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி நிதி ஒதுக்கீடு


* நீர் வளத்துறைக்கு ரூ.4,791 கோடி நிதி ஒதுக்கீடு


* பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ755-ல் இருந்து ரூ900 ஆக உயர்வு 


* கல்லூரி விடுதி மாணவர் உணவுப்படி ரூ875-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்வு


 


11.20 AM: ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி: அமைச்சர் ஜெயக்குமார்


கோவை, திருச்சி, மதுரையில் ரூ.150 கோடி செலவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.


11.15 AM: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு


11.10 AM: குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


நிதி ஒதுக்கீட்டின் 4 முக்கிய அம்சங்கள்:


* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடு


* காவல்துறையினர் வீட்டு வசதிக்கு ரூ. 450 கோடி ஒதுக்கீடு:


* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு


* மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடு


11.00 AM: 2018-ல் தமிழக அரசின் கடன் சுமை ரூ.3,16,366 கோடியாக இருக்கும்: நிதியமைச்சர் ஜெயக்குமார்


10.55 AM: நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


நிதி ஒதுக்கீட்டின் சில முக்கிய அம்சங்கள்:


* கால்நடை பராமரிப்பிற்கு ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு


* திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.723 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு


* விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு


* வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என மதிப்பீடு


10.45 AM: தமிழகத்தில் ரூ.13,14,366 கோடி கடன் உள்ளது என்றும், 2017-18-ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் 


கூறினார்.


10.40 AM: நிதியமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.


10.39 AM: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்குப் பிறகு சபாநாயகர் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


10.36 AM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அதற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் 


செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சசிகலா, தினகரனுக்கு நன்றி தெரிவித்ததை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். தண்டனை பெற்றவரைப் பற்றிப் பேசுவது முறையல்ல என்று ஸ்டாலின் பேசினார்.


தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.