4 மாவட்ட IAS அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு கூட்டம்!
அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது!
அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களை தொடர்ந்து அழைத்து அந்தந்த மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்துப் பணிகள், விவசாயம் சார்ந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் இன்று தேனி, தருமபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களை அழைத்து அவர்களது மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வின் போது அவர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.