பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தார் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்...
பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி ன்பரின் மகன் செல்வன் சந்தோஷ்குமார் மற்றும் செந்தாமரைக்கண்ணன் என்பவரின் மகன் செல்வன் சக்தி சிவகண்ணன் ஆகிய இரண்டு மாணவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த கல்யாணி என்பவரின் கணவர் திரு. வெங்கடேசன் என்பவர் கடலில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முகமது ஜமருல்லா என்பவரின் மகன் திரு. சபீர் அகமது என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், உடுமலைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. மணிகண்டன் என்பவரின் மகன் செல்வன் லட்சுமணன் என்பவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், வெள்ளாளகுளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணசாமி என்பவரின் மகன் திரு. ரவிச்சந்திரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆத்தாளூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. வீரையன் என்பவரின் மனைவி திருமதி காளியம்மாள் என்பவர் தனது வீட்டினை பழுது நீக்கும் பணியின் போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்த திருமதி போதும்பொண்ணு என்பவரின் கணவர் திரு. அண்ணாத்துரை என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், நீலாங்கரை கிராமத்தைச் சேர்ந்த திரு. தனக்கொடி என்பவரின் மகன் திரு. ரமேஷ் என்பவர் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணியின் போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜெயசுதா என்பவரின் கணவர் திரு. செல்வராஜ் என்பவர் கிணற்றில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண் சரிந்து விழுந்து உயிhழந்தார் என்ற செய்தியையும்;
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பூங்கொடி என்பவரின் கணவர் திரு. ராமசாமி என்பவர் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சென்னை மாவட்டம், அமைந்தகரை வட்டம், அண்ணாநகரைச் சேர்ந்த திருமதி ஆனந்தலட்சுமி என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி குறுவட்டம், சென்றாயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சீனிவாசன் என்பவரின் மகள் செல்வி கிரிஜா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், கொல்லச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. மோகன் என்பவரின் மகள் சிறுமி மாசாணி என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், தி. நெல்முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் என்பவரின் மனைவி திருமதி அன்னகொடி என்பவர் மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த மேற்கண்ட 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.