சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து தோல்வி குறித்து அதிமுக தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமை உள்ளது. இதனை மாற்றி ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.


அதேபோல பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்று விழுப்புரம் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இது பாஜக தலைவர்கள மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


அதிமுக சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் திமுக மற்றும் தினகரனுடன் மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அதிமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மூலமும் சர்ச்சை ஏற்ப்பட்டது. 


இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று இன்று சென்னை ராயப்பேட்டயில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக தலைவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிமுகவில் கட்சி ரீதியான முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல் அமைச்சர் சந்தித்து பேசி வருகிறார். நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பின்பு, முதல்வர் -ஆளுநர் சந்திப்பு பேசி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.