நெகிழி மாசில்லா தமிழ்நாடு -உறுதிமொழி ஏற்று துவங்கப்பட்டது!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (14.11.2019) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று துவக்கி வைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (14.11.2019) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று துவக்கி வைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, தமிழ்நாடு அரசால் ஜனவரி-1, 2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து, www.plasticpollutionfreetn.org என்ற வலைதளத்தையும், Plastic Pollution Free Tamil Nadu என்ற கைப்பேசி செயலியையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.8.2018 அன்று துவக்கி வைத்தார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை 10.12.2018 அன்று முதலமைச்சர் துவக்கி வைத்தார்கள்.
மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 17.6.2019 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற இயக்கத்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் நாளான இன்று, உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் “நெகிழி மாசில்லா தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.