நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவ கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றி தமிழக முதல்வர் தெரிவிக்கையில்... 


“குமரி மாவட்ட அரசு மருத்துகல்லூரியில் 100-ஆக உள்ள மாணவர் சேர்க்கையை 150-ஆக உயர்த்தப்படும். 20 புதிய சுகாதார மையங்கள் உருவாக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப பாலங்கள் அமைக்கப்படும். இணையம்புத்தன் கிராமத்தில் தூண்டில்பாலம் அமைக்கப்படும். மத்திய அரசின் ஒத்துழைப்போடு சிறுநகரங்களில் தமிழக அரசு விமான நிலையங்களை அமைத்து வருகின்றது.


ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக்கை வரும் 2019 பிப்ரவரி முதல் ஒழிப்போம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் விருதினை தொடர்ந்து 4 ஆண்டுகளாக பெற்று வருவது தமிழகஅரசு தான். அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவு மட்டுமின்றி 14 வகையில் நலத்திட்ட உதவிகள் தமிழக அரசு வழங்குகிறது" என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்... எல்லைகள் மறு சீரமைப்பு முடிந்ததும் நகராட்சியாக உள்ள நாகர்கோவில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்!