சேலத்தில் அரசுப் பொருள்காட்சியை துவங்கி வைத்தார் முதல்வர்!
தமிழகத்தில் நடைபெற்றுள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூபாய் 39 கோடி லாபம் கிடைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் நடைபெற்றுள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூபாய் 39 கோடி லாபம் கிடைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூபாய் 13 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியாதாவது., அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள பொருட்காட்சி பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் இதுவரை ரூபாய் 39 கோடி லாபம் கிடைத்துள்ளது. காவிரி- கோதாவரி இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறை அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது" என குறிப்பிட்டு பேசினார்.
அவரை தொடர்ந்து ‘2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பழனிசாமியே வருவார்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே நிகழாண்டில் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் அரசுப் பொருள்காட்சியின் துவக்க விழா இன்று நடைப்பெற்றது, நிகழ்ச்சியினை முதல்வர் பழனிசாமி துவங்கிவைத்தார். நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். பின்னர் திங்கள்கிழமை மாலை கார் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வார் என தெரிகிறது.