தமிழகத்தில் 9 ஐ.எ.ஏஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் :


சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே. பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.


ALSO READ : 1300 ஆண்டு கால பல்லவர் சிலை செஞ்சி அருகே கண்டுபிடிப்பு"


சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிராமப்புறம் துணைக் காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ : கஞ்சா வழக்கில் கடமை தவறிய காவல் துறை ஆய்வாளர் படை இடை நீக்கம்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR