தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!


இதனைத் தொடர்ந்து பேசிய அவர், குஜராத் பல்கலைக்கழகம், தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், அம்மாநிலங்களின் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவில் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாக அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.


இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலை தூக்கி இருப்பதாகவும், குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தவர்களை நியமனம் செய்வதாகவும் கூறினார். இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை - மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருப்பதாகவும் கூறினார்.


இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இச்சட்டம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது எனவும், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.



ஏற்கனவே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 


தற்போது துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு பரிந்துரைக்கும் 3 பேரில் ஒருவரை ஆளுநர் நியமித்த நிலையில், இந்த மசோதா சட்டமானால், இறுதி முடிவை தமிழக அரசே எடுக்கும். ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ள துணைவேந்தர் நியமனங்கள் தமிழக அரசின் நேரடி அதிகாரத்துக்கு வரும். 


துணை வேந்தர் நியமன முறை மாற்றப்பட்டாலும் இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரே நீடிப்பார். இந்த புதிய மசோதாவின் படி ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தர்களை நீக்க முடியாது. ஆளுநரின் அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.


மேலும் படிக்க | CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR