தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கி வரும் சுமார் 8,000 சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் சத்துணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றது. 


இதன் மூலம் 50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பல சுமார் 8000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே 25-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் சத்துணவு மையங்களை மூடுவதால் தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பு குறைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மூடப்படும் மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படும் எனவும், அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.