ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குடும்பத்தாருக்கு அரசு பணி!
ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்!
ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்!
கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட136 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் அரசு நிறுவனங்களில் பணிபுரிய பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.
ஒகி புயலின்போது நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 27 பேர் உயிரிழந்ததுடன், 177 பேர் மாயமாகினர். உயிரிழந்த 27 பேரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகையாக தலா 20,00,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், மாயமான மீனவர்கள் 177 பேரும் உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 20,00,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஒகி புயலில் மாயமான மீனவர்கள், உயிரிழந்ததாக கருதப்பட்டு, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன ஆணைகளை, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதன்படி முதற்கட்டமாக மாயமான மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.