தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்ட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் -நடிகர் பிரகாஷ் ராஜ். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். 


அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 


இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, #justasking என்ற டாக்கை பயன்படுத்தி பல்வேறு பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த சம்பவம் தொடர்பாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிப்பை பதிவு செய்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் சொந்த மக்கள் போராடிய போது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. 


போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா?. மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது என நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..!