ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 ரூபாய் உயர்வு; காரணம் என்ன?
ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றம் விற்பனை விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாவ ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹28 இருந்து ₹32-ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது லிட்டருக்கு ₹4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ₹35 இருந்து ₹41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ₹6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.