2017-18ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு - விவரம் உள்ளே!!
2017-ம் ஆண்டுக்கான தமிழ் பேரறிஞர்களுக்கான தமிழக அரசு விருது குறித்து அறிக்கை வெளியிடப்படுள்ளது.
2017-ம் ஆண்டுக்கான தமிழ் பேரறிஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் யாருக்கு வழங்கபடுகிறது என்பது குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விருது பெற்ற அனைவருக்கும் காசோலை தங்கப்பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்படுள்ளது.
விருது பெறும் நபர்கள் விவரம் பின்வருமாறு:-
திருவள்ளுவர் விருது : முனைவர் பெரியண்ணன்
தந்தை பெரியார் விருது : பா.வளர்மதி
அண்ணல் அம்பேத்கர் விருது : சகோ.ஜார்ஜ்
மகாகவி பாரதியார் விருது: முனைவர் சு.பாலசுப்ரமணியன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது : கே. ஜீவபாரதி
அறிஞர் அண்ணா விருது : அ. சுப்ரமணியன்
காமராசர் விருது : தா.ரா.தினகரன்
தமிழ்த்தென்றல் திருவிக விருது : எழுத்தாளர் வை.பாலகுமாரன்
தமிழ்க் காவலர் விசுவநாதம் விருது: முனைவர் ப.மருதநாயகம்.