தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து தமிகத்தில் பல நகரங்களில் வெயில் 100 டிகியைத் தாண்டி வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக, மழையும் பெய்து வருகிறது.


இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் அதிகமிருக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மூன்று நாட்கள் பயங்கர அனல் காற்று வீசக்கூடும் என்றும், மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 4 நாட்களுக்கு வெப்பச்சலனம் இருக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.