திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என வேலூர் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்டார்.


வேலூரில் பல இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், வேலூர் ராமநாயக்கன் பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்ற வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்குள்ள மரத்தடியிலும், வீடுகளின் திண்ணைகளிலும் உட்கார்ந்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.


அப்போது பேசிய பெண் ஒருவர், ‘திமுக ஆட்சி வந்தவுடன்தான் எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி கிடைத்தது. அதற்கு முன்பு சாலை வசதி கிடையாது. ஏன் எந்த அடிப்படை வசதியும் எங்களுக்கு கிடையாது. 100 நாள் வேலைத்திட்டமும் திமுஎக ஆட்சியின்போது தினமும் எங்களுக்கு கிடைத்தது. இந்த ஆட்சியில் 100 நாள் வேலை எங்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. என தெரிவித்தனர்.


இதனைத்தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 2017 - 2018-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் மடிகணினி வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிதான் வர வேண்டும். நாங்கள் கண்டிப்பாக திமுக-வுக்கு தான் வாக்களிப்போம்" என தெரிவித்தனர்.


பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.