5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.


இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று செய்திகளும் வெளியானது.


மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரூ.100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடப்பாண்டு மட்டுமல்ல, எப்போதும் இல்லை. பொதுத்தேர்வு உள்ளது என வெளியாகும் தகவல்கள் தவறானவை. மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளதாகவும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.