வேலூர் மாவட்டத்தில் குடும்ப  அட்டை த்தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கினார். இதன்பிறகு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அண்மையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு - ஜனவரி 12 கிளைமேக்ஸ்!


அதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழையின் காரணமாக அந்த பகுதிகளில்  750 ஏரிகளை உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையும் சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆட்சியாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றார்கள். அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. அதனையும் செலுத்தி, மேலும் மக்களுக்கான அரசின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.


தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு சரி செய்து வருகிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். ஒரு சிலர் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், பெரும்பாலானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதனால், இந்தப் போராட்டம் பிசுபிசுத்தது என்றார். 


துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்கதக்கது என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தில் அழுத்தம் கொடுப்பீர்களா என கேட்டதற்கு அவர்களிடம் கூறத்தான் முடியும் அழுத்தம் எப்படி கொடுக்க முடியும் என்றும் பதிலளித்தார். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தைப் பொறுத்தவரை 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓய்வூதியம், வாரிசுதாரர்களுக்கு வேலை, பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும் என மாநில முழுவதும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும், தொழிலாளர்கள் தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற காலவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 


மேலும் படிக்க | சிதம்பரம் கனகசபை மீது வழிபாடு நடத்த போராடுவீர்களா அண்ணாமலை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ