இந்த 2 நாள் கவனம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Rain Latest Updates: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் டிச.25, 26 ஆகிய இந்த 2 நாள்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Rain Latest News Updates: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச. 23) மழை மற்றும் வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் இன்று முதல் 7 நாள்களுக்கான வானிலை நிலவரத்தை வழங்கியிருக்கிறது. இதனை தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் பகுதியில் மழை இருக்குமா, எவ்வெப்போது மழை இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அந்தவகையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (டிச. 22) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச. 23) காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மழையா...?
இது நாளை (டிச. 24) மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரத்தின்படி, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | போக்குவரத்து ஊழியர்களுக்கு Good News.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து, வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.'
டிச.25 மற்றும் டிச.26
அதேபோன்று, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை மறுதினம் (டிச. 25) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் டிச. 26ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வரும் டிச. 27ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், டிச.28 மற்றும் டிச.29 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதர்மேன் கொடுத்த அப்டேட்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில் இன்று போட்ட பதிவில்,"இப்போது ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தற்போது இது தமிழக கடற்கரையை நோக்கிச் வருகிறது. அது தனது வடக்கு பகுதிகளில் நல்ல மேகக்கூட்டங்களை கொண்டுள்ளது.
இதனால் வரும் டிச.25ஆம் தேதி இரவு மற்றும் டிச.26ஆம் தேதி காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் இந்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். இந்த மழை பாதிப்பு ஏதும் தராது. இதனை மகிழ்ச்சிகரமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனால், சென்னையை சுற்றிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் இந்த 2 நாள்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ