Tamil Nadu electricity Board News Tamil : மழைக்காலம் வந்தாலே கரண்ட் கட் பிரச்சனையும் சேர்ந்தே வந்துவிடும். அதுவும் இரவு நேரம் என்றால் மின்சாரம் இல்லாமல் ஒரு 8 மணி நேரத்தை கடத்துவது என்பது பெரும் பிரச்சனையாகிவிடும். குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் நெருக்கடி எப்படி இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பரான நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆம், மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை 24 மணி நேரமும் மின்வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 94987 94987 என உதவி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை மின்சாரம் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்பு கொள்ளலாம். இது மட்டும் இல்லை, மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க மின்வாரியத்தின் செயலி ஒன்றும் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

TANGEDCO செயலி


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சாரம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் TANGEDCO செயலி மூலம் தீர்வு காண முடியும். மின் தடை ஏற்பட்டால், மின்சாரம் திருடப்பட்டால், கூடுதல் மின் கட்டணம் வந்தால், தீ விபத்து, பழுதான நிலையில் இருக்கும் மின் கம்பம் என எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் இந்த செயலி மூலம் நீங்கள் மின் வாரியத்துக்கு புகார் தெரிவிக்கலாம். அதாவது, மொபைல் போனில் இருக்கும் இந்த செயலி மூலம் புகாரை குறிப்பிட்டு பட்டனை தட்டினால், உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தீர்வு கிடைத்துவிடும். 


மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான் - துரை வைகோ!


TANGEDCO செயலியில் புகார் தெரிவிப்பது எப்படி?


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் TANGEDCO செயலியில் மின் கட்டணம் செலுத்தல் மற்றும் புகார்களை பதிவு செய்தல் இரண்டு விதமான ஆப்சன்கள் இருக்கும். முதலில் வாடிக்கையாளர்கள் எளிதாக மின் கட்டணம் செலுத்தும் வகையில் தான் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இதை மின்வாரியம் மேம்படுத்தியுள்ளதால் புகார்களையும் பதிவு செய்யலாம். எங்கிருந்து புகார்களை பதிவு செய்கிறீர்களோ, அந்த இடத்தில் இருக்கும்போது உங்கள் லொகேஷனையும் ஆன் செய்ய வேண்டும். புகார் தெரிவித்தவுடன், உங்கள் லொகேஷனை வைத்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். கூடுதலாக மின் இணைப்பு எண்ணையும் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில், உங்கள் புகார் மீது மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். 


இந்த செயலி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மழை போன்ற இக்கட்டான நேரத்தில் பொதுமக்களின் புகார்களை பெற்று சீக்கிரம் நடவடிக்கை எடுக்க இந்த செயலி பெரும் உதவியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க மக்களே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ