தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள களிமேடு கிராமத்தில் பிரபல அப்பர் கோலிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழா நடைப்பெற்றது. அதையொட்டி அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை வரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலங்கரிக்கப்பட்ட தேரானது தஞ்சை களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக ஊர்வலம் கொண்டுவரப்பட்டது.


இதற்கிடையில், இன்று அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலை பகுதிக்கு தேர் இழுத்து வரப்பட்டது. அப்போது உயர்மின் அழுத்த கம்பி மீது தேர் உரச நேர்ந்தது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. 


அப்போது தேரினை பிடித்து இருந்த, தேரின் அருகினில் இருந்த மக்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த மின்சார விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த  காயமடைந்தனர்.



இதனை தொடர்ந்து காயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி


இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், இந்த தேர் திருவிழா விபத்து நடைப்பெற்ற இடத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்திய பிரதமர் தனது ட்வீட்டில் தஞ்சை தேர் விபத்துக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த நபர்களுக்கு தலா ₹50,000 இழப்பீடு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR