அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்றும், எம்ஆர்பி விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை


எதிர்கட்சிகளுக்கு பதில்


இது குறித்து அவர் பேசும்போது, " முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது, இனிமேல் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் நாங்களும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுக்கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான். 


ஊழியர்களுக்கு எச்சரிக்கை


அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர். இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யபட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது.


பணி நீக்கம் செய்யப்படுவார்கள்


மேலும், சமூக வலைதளங்களில் தவறான முறையில் பதிவு செய்ய கூடாது. இனி ரூ. 10 கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் மதுக்கடை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறோம். அவர்கள் கூறும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்" என பேசினார்.


மேலும் படிக்க | விஷமிகளின் வேலை..! கொதிக்கும் விஷன்.V! நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ