மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் மாணவர்கள் போராட்டத்துக்குப் பின் பணியிடை நீக்கம்
ஆன்லைன் வகுப்புகளின் போது, ஆசிரியர் மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டிஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனவும் கூறி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கோவையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளும், வழக்கமான வகுப்புகளும் நடைபெற்று வரும் நிலையில், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டிஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனவும் கூறி அவர் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | புதுச்சேரி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை
மேலும் வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை தேவையில்லாமல் தொடுவதோடு, பாடங்களை தாண்டி மாணவிகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் தேவை இல்லாத விஷயங்களை அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவிகள், தலைமையாசிரியரிடம் கடந்த வாரம் புகாரளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வரவில்லை.
இருப்பினும், குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் சீண்டலில் (Sexual Assault) ஈடுபட்ட ஆசிரியருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகள் பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலின் போது, குற்றம் புரிந்த ஆசிரியர் மீது மாணவர்களுக்கு உள்ள கோவமும், உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது அவர்களுக்கு உள்ள அதிருப்தியும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
இந்த நிலையில், குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட கணினி ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ALSO READ | அம்மா..என்னை மன்னித்துவிடு..நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR