திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள அரசுவெளி கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தினை சேர்ந்த சிவகாசி என்ற மாணவன் இந்த பள்ளியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கடந்த மாதம் 28 தேதி மாணவன் சிவகாசியின் முகம் வீங்கியுள்ளதாகவும், உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லக்கோரி இரவு 9 மணியளவில் மாணவனின் தந்தை செவத்தானுக்கு ஆசிரியர் மகாலஷ்மி தொலைப்பேசியில் தகவல் கொடுத்திருக்கிறார்.



தகவலின் பேரில் அங்கு வந்த அவரது தந்தை சிவகாசியை நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் பாகாயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றுள்ளனர், அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் சிவகாசி ஏற்கனவே, இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.


அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,அதில் தனது மகன் சிவகாசியின் முகத்தில் உள்ள முகப்பருக்களை ஆசிரியை மகாலஷ்மி ஊசியின் மூலம் நீக்கியுள்ளதாகவும், ஊசியில் இருந்த இரும்பு துகள்கள் முகத்தின் முகப்பருவுக்கு உள்ளேயே நின்றுள்ளதால் அதன் பின்னர் அவனது முகம் வீக்கம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர், பள்ளி ஆசிரியர் தனக்கு தகவல் அளித்ததாகவும், பேசவும், நடக்க முடியாத நிலையில் தனது மகன் சென்றுவிட்டதாகக் கவலை தெரிவித்தார்.


மேலும் படிக்க | மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்கள் - 'அம்பு விட்டு வம்பு செய்யும் ஆந்திர பெண்'


இந்நிலையில், மாணவனின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியை மகாலஷ்மியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் தந்தை புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவில்தான் சிறுவன் சிவகாசியின் இறப்பில் உள்ள மர்ம முடிச்சுகள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கந்துவட்டி கொடுமையால் மருந்து குடித்து உயிரைவிட்ட இளைஞர் - அம்மாவுக்கு அனுப்பிய கடைசி வீடியோ !!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR