அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து நேற்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப் பட்ட நிலையில் மீண்டும் வழக்கம்போல் இழுபறியில் முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (வெள்ளிகிழமை) அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்கள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.


இதனையடுத்து மெரினா கடற்கரையில், ஜெயலிலதா நினைவிடத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனால் அதிமுக தொண்டர்கள் பலரும் அங்கு திரண்ட நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் அணியினறுக்காண  பொறுப்புகள், பதவிகளை பகிர்ந்து கொடுப்பதில் இழுபறி நீடிப்பதாகவும், முடிவு எட்டப்படுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் தெரிகிறது.


இந்நிலையில் இரு அணிகள் இணைப்பு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நிலவிவருகிறது.