ஈரோடு : பூட்டிய வீடுகளில் கில்லாடி தனத்தை காட்டிய தெலுங்கானா தம்பதிகள்!
ஈரோடு மாவட்டத்தில் பூட்டிய வீடுகளை உடைத்து அடுத்தடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மூலப்பாளையம் பசுமை பாரதி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 13 ம் தேதி இரவில் வெளியூர் சென்றிருந்த 5 பேரின் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற பொறியாளர், போஸ்ட் மாஸ்டர் ஆகியோரின் வீடுகளில் 39 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது. ஈரோடு மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை நிகழ்ந்த பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையில் ஈடுபட்டது தெலுங்கானாவை சேர்ந்த கும்பல் என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தெலுங்கானா வாரங்கலை சேர்ந்த விஜய், மணி, சூர்யா, மற்றும் மற்றும் விஜய்யின் மனைவி மீனா மணியின் மனைவி லட்சுமி, சூர்யாவின் மனைவி பாரதி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 39 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் மீட்கப்பட்டது.
விசாரணையில் கைதான 6 பேர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR