தென்காசி, செங்கல்பட்டு தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக அறிவிப்பு!
சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டையை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டையை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!
தமிழகத்தில் தற்போது மொத்தம் 32 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. கடைசியாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. இதை தொடர்ந்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.